dimanche 8 avril 2012

பிடிக்கவில்லை

சிரிக்க பிடிக்கவில்லை
சிந்திக்க பிடிக்கவில்லை
நித்திரை கொள்ள பிடிக்கவில்லை
உணவை ருசிக்க பிடிக்கவில்லை
மனதில் ஓர் சோகம்
உடம்பில் ஓர் சோர்வு
என்னடா  வாழ்கை இது
யோசித்து பார்தேன்
கடைசியில் மிஞ்சியது
யாருக்கும் தெரியாமல்
அழுத அழுகையும்
அழுகையில் நனைந்த
எனது விழிகளும் !!!!!
ஆசை

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது

உன் மேல்
கோவிக்கும்
போதுதான்
என் ஆசைகள்
எல்லாம் எழுந்து
நிற்கின்றனநீ வேண்டும்

நான் சாய்ந்து கொள்ள
உன் தோல் வேண்டும்

என் தலை வைத்து படுத்து கொள்ள
உன் மடி வேண்டும்

என் முடி கலைத்து விட
உன் விரல்கள் வேண்டும்

என் கன்னங்கள் நனைத்திட
உன் முத்தங்கள் வேண்டும்

என் காது மடல்கள் சூடு ஏற
உன் மூச்சு காற்று பட வேண்டும்

என் இதயம் பட படக்க
உனது உதடுகள் எனது பெயரையே கொஞ்ச வேண்டும்

என் கனவுகள் நினைவாகிட
நீ என்னருகில் வேண்டும்

என் ஆயுள் நீடிக்க உன் அன்பு மொத்தமும் வேண்டும்
கிடைக்குமா.......ஓவியா

ஏன் கற்று கொடுத்தாய் ??எனக்கு சிரிக்க கற்று கொடுத்தாய்
எனக்கு சிந்திக்க கற்று கொடுத்தாய்
எனக்கு வாழ்க்கையை ருசிக்க கற்று கொடுத்தாய்
எனக்கு கவலையை மறக்க கற்று கொடுத்தாய்
எனக்கு தனிமையை நேசிக்க கற்று கொடுத்தாய்
எனக்கு காதலின் உணர்வுகளை ரசிக்க கற்று கொடுத்தாய்
எல்லாம் கற்று கொடுத்த நீ
உன் பிரிவை சகிக்கும் வளியை மட்டும்
ஏன் கற்று கொடுத்தாய் ??

காத்துகிடக்கின்றன

ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும்
பட்டென்று துடைக்க
காத்துகிடக்கின்றன
என் இரு கைகள் !!!

கவலையால் நீ வாட
உன் தலை சாய
காத்துகிடக்கின்றன
என் இரு தோள்கள்

உன் சின்ன சின்ன அசைவுகளும்
செவி கொடுத்து கேட்க
காத்துகிடக்கின்றன
என் இரு செவிகள்

வறண்ட உன் உதட்டிற்கு
தாகம் தீர்க்க
காத்துகிடக்கின்றன
என் உதடுகள்

காரிருள் மழையில்
குளிரில் வாடும்
உன் தேகத்திற்கு
சூட்டை கொடுக்க
காத்துகிடக்கின்றன
என் தேகம்

என் பெண்மையும்
உன் ஆண்மையும் கலந்து
வியர்க்கும் நேரம்
எப்போதோ !!!!!

பகலில் உன் நினைவோடும்
இரவில் உன் கனவுகலோடும்
தவிக்கும் என் மூளைக்கு
ஓய்வு எப்போதோ !!!

அதற்கு தீர்வு
உன்னை
காண்பது மட்டுமே..........


ஓவியா

மனதோடு மனதாக

மனதை பரவசப்படுத்தும்
அதிகாலை
சூரிய உதயம்

புக்களின்
மகரந்தம் தேடி
காதல் பாட்டு பாடும் தேனிக்கள்

சல சல மழைத் தூறலில்
எழுந்து வரும்
அற்புத மண் வாசம்

காற்று விசும் திசையோடு
கைகொர்ந்து ஆடும்
வயல்வெளி புள்கள்

வண்ணமயமாய்
பறந்து திரியும்
வண்ணத்து பூச்சிகள்

இப்படி
எத்தனையோ
இயற்கை காட்சிகள்
என்னை கவர்ந்தாலும்....

உங்கள் கடைக்கண் பார்வைக்கும்
உங்கள் அழகு சிரிப்பிற்கும்
இவை அனைத்தும்
ஈடாகவில்லையடா !!!!!ஓவியா

கண்ணீர்

இதயத்தில் இருந்து
பெருகெடுத்து
கண்கள் வழியே
கன்னங்களை
ஈரம் ஆக்கி
முத்து முத்தான
கண்ணீர் துளிகளே ...

இன்பாமான  நேரத்திலும்
சோகமான நேரத்திலும்
எனக்கு துணையாக
இருந்தாயே...

எத்தனை இரவுகள்
ஆறுதலாக
என்னை அரவனைத்தாய்...

உப்பு கரிக்கும் உன் அமுதம்
என் இதழில் பட்டு
நாவில் சுவைத்து
என் தாகம் திர்த்தாய்...

நீ எங்கு போனாய்
வற்றி போன
என் கண்கள்
உன்னை தேடுகிறது...

இயற்கையை குளிப்பாட்ட
உன் கண்ணீரை
வீணாக்காதே...

தனிமையில் வாழும் 
என் போன்ற பெண்களுக்கு
நீ தான் துணை

வா வந்து விடு என்னிடம் !!!!!!!!

ஓவியாஅப்பாஅன்பும் அறிவும் தந்து வளர்த்திர்கள்
என் கை பிடித்து நடக்க கற்று கொடுத்திர்கள்
நான் தவறி விழுந்தாலும் பதறி போவிர்கள்
கட்டி அனைத்து முத்தம் இடுவிர்கள்

இரவு பகல் என்று பாராமல்
என்னை சீராட்டி வளர்த்திர்கள்...
தலை சீவி பூ முடிச்சு
பள்ளிகூடம் அனுபுவிர்கள்...

நிலவை காட்டி
அம்மா எனக்கு சாப்பாடு உட்டியது இல்லை....
உங்கள் மடியில் வைத்து தான் ஊட்டுவிர்கள்
அம்மாவுக்கு பொறாமை படும் அளவுக்கு

நான் விரும்பினதை வாங்கி கொடுத்திர்கள்
எனக்கு நல்ல படிப்பு சொல்லி கொடுத்திர்கள்
அன்பும் பண்பும் பாசமும் ஆதரவும் கொடுத்திர்கள்

அம்மாவை விட
ரொம்போ செல்லம் என் அப்பாவிடமே
அழுதாலும் சிரித்தாலும் என் அப்பாவிடமே
அடித்தாலும் திட்டினாலும் என் அப்பாவிடமே

அழகான என் அப்பா முகத்தில்
கம்பிரமான அந்த சிரிப்பு எனக்கு ரொம்போ பிடிக்கும்
உள்ளகத்திலே உயர்ந்தவர் பண்புள்ளவர் என் அப்பா
இப்படி சொல்லிகிட்டே போலாம் என் அப்பா புகழ்

அப்பா முகம் வாடி நான் பார்த்தது இல்லை

அனால்

பெண்ணுக்கு பருவம் ஒரு கோளாறு
அது பந்தம் பாசம் கண்ணை மறைக்கும்
எனக்கும் மறைந்தது
கை பிடித்தவன் பின் சென்றேன்

அன்று என் அப்பாவின் கண்ணீர்
என்னை தடுக்கவில்லை
என் அப்பாவின் கையை உதறி விட்டு
அவன் கை பற்றினேன்

பந்தம் பெருசா
காதல் பெருசா
அப்போ தெரியாத புரியாத வயசு

இன்று அப்பா என்னை மன்னித்தாலும்
நான் செய்த தவறு
என் மனதில் ஆறாத காயமாக உள்ளது


கண்ணிருடன் உங்கள் அன்பு மகள் ஓவியா