jeudi 3 mai 2012

ஏன் பிரிந்தாய் ???


அன்பு என்னும் நம் பிரிவை
உயிர் மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய் ?

நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்

நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்



கண்களால் கைது செய்



வளர்பிறை நெற்றி
அதில்
அழகாய் ஒரு பொட்டு !
அம்சமாய் நீ !

ஏனோ விழிகளை மட்டும்
கடவுள் ஏன் ஈட்டியாய்
படைத்தான் உனக்கு !
நெஞ்சை துளைத்து
மறுபுறம் வருகிறதே !
என்ன கூர்மை !

உன் விழிகளை பார்த்து
நான் கண்ட உண்மை
கண்களும் பேசும் என்பதுதான் !

இமை அழகா !
விழி அழகா !
இல்லை இல்லை இரண்டும் அழகா !
பட்டிமன்றமே வைக்கலாம் !
தோற்பது யாராயினும்
ஜெயிப்பது உன் விழி அல்லவா !

இறைவா….
கண்ணீர் இல்லா
வாழ்வை

இந்த அழகு கண்களுக்கு தா !



உன் மனைவி

என்று உன்னை பார்த்தேனோ
அன்றே நான் என்னை மறந்தேன்
உன்னோடு பேச்சும் ஒவ்வொரு
நிமிடம் என் மனதுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சி
பறப்பது போல ஒரு உணர்வு.
எத்தனே சொந்தம் என் வாழ்வில் வந்தாலும்
உன் அன்பு என்னும் பந்தம்
எதுவும் தந்ததில்லை
உனக்காக நான் வடிக்கும்
கண்ணீர் முத்துக்கள்
என் இதயதில் பத்திரமாக
பூட்டி வைத்து இருக்கேன்
உன்னே சந்திக்கும் நாள்
உனக்கு மாலை சூட
இனி ஒரு ஜென்மம் இருந்து
உயிரினமாய் பிறந்தால்
உன் மனைவி ஆகும் பாக்கியம் வேண்டும்



வா கடவுளே வா !!!!

நீ என் மனதில் இருந்தால்
என் துன்பம் தீரும்...

நீ என் கூட இருந்தால்
என் வேதனை தீரும்

நீ என் உயிரில் இருந்தால்
என் உள்ளம் இன்பம் அடையும்

என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தும்
நான் தனிமையில் தான் வாழ்கிறேன்

நீ என்னை கூப்பிடும் அந்த நாள் வரை
நான் காத்திருக்க மாட்டேன்

நீ சீக்கிரம் வந்து என்னை
உன்னுடன் வைத்துகொள்

வா கடவுளே வா !!

இந்த பொய்யான மனிதர்களிடம் இருந்து
என்னை காப்பாற்று !!


என் உயிர் நீதானே


mardi 1 mai 2012

உன் நினைவுகள் !!!






ஒரு தாயின் கண்ணீர்

முதல் முறை அவரை பார்த்தேன்
என் முகம் வெக்கத்தால் சிவந்தது...
என் மனசு சொல்லியது இவர் தான்
உன் "அவர்" என்று...
புன்னகையாய் அருகில் வந்தார் !!!
மென்மையாக என் கையை பற்றி...
நான் உன்னை நேசிக்கிறேன் !!
இனி என் உயிர் உள்ள வரை
உன்னோடு தான் என்றார்!!!


கால்கள் தள்ளாடியது !!
இதயம் படபடத்தது !!
அவர் பார்வையில் மயங்கி
பேசும் சக்தி இழந்தேன் !!
அங்கே மௌனம் நிலவியது !!!

"அம்மா பசிக்குது சாப்பாடு பொடு"
என் பிள்ளைகளின் குரல் கேட்டு
நினைவுகளில் இருந்து விடுபட்டேன் ...

நஞ்சை விட கொடியது
ஏமாற்றும் ஆண்களின் மனது
அதை புரிந்துகொள்ளாமல்....
இதோ தனிமையில்
கவலைகளை மறைத்து
கண்களில் கண்ணீரோடு வாழ்கிறேன்
என் உயிர் உள்ள வரை
என் பிள்ளைகளுக்காக!!!


கற்பனை கணவன்


நெற்றி பொட்டில்
செல்லமாக முத்தமிட்டு...
கையில் காபி யுடன்
என்ன வந்து எழுப்புவார்..
சின்ன சினுக்களுடன்
அத்தான் என்றேன் !!
கண்ணமா என்றார் !!

காலை பொழுது நான்றாக விடிந்தது
ஆயிரம் பட்டம்பூசிகள்
என் மனதில் குடி கொண்ட
சந்தோஷத்தில்...
மான் போல் துள்ளி துள்ளி
வீட்டு வேலைகளே முடித்தேன்.

மாலையும் வந்தது
கண்களில் காதலுடன்
என் கணவருக்காக
வழி மீது விழி வைத்து
காத்திருந்தேன்...

அதோ அத்தான் வந்துவிட்டார் !!
மெல்ல அனைத்து முத்தம் இட்டு
என் கூந்தலில் மல்லிகை பூ சுட்டினார்.

அந்தி சாயும் அந்த மாலை பொழுதில்
இருவரும் கைகோர்த்து
நிலா வெளிச்சத்தில்
தென்றல் காற்று வீச
மெல்ல நடந்து செல்கிறோம்
மௌனங்களே மொழி பெயர்த்து கொண்டு !!!



உன் வருகைகாக.....



கண்களில் கண்ணீர் ..

காரணம் தெரியவில்லை ..!
 
உன்னை பற்றிய சிந்தனை கற்கள் ...

என் நெஞ்சில் மோதி வலிக்கிறது!

உன்னை பற்றிய நினைவுகள் ...

கல்லை அரிக்கும் கடல் தண்ணீரை போல ..

என் இதயத்தை அறிகின்றன ..!

ஏன் உன்னிடத்தில் இந்த மௌனம் 


ஏன் நீ என்னை விட்டு வெகு துரம் சென்று கொண்டிருக்கிறாய்

ஏன் இந்த இடைவேளி நமக்குள்

இப்படி விடை தெரியா ஆயிரம் கேள்விகள்

என் முன் நிற்கின்றன ..!

இதுதான் என் கண்ணீருக்கான ..காரணமோ ?!

எத்தனை ஜன்மம் எடுத்தாலும்

உனக்காக காத்திருப்பேன்
உன் வருகைகாக..... 


ஓவியா




எங்கே என் அவர்...

மேகத்தில் மறைந்திருக்கும் வெண்நிலவே நீ சொல்லு
எங்கே என் அவர் ....
தினமும் என் மேனியை தழுவி விட்டு போகும் 

தென்றல் காற்றே நீ சொல்லு
எங்கே என் அவர் ....
என் வீட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கும் 

மல்லிகையே நீ சொல்லு
எங்கே என் அவர் ....
மென்மையாக என் பாதங்களை முத்தமிட்டு போகும்

கடல் அலையே நீ சொல்லு 
எங்கே என் அவர் ....

தேடுகிறேன்.... தேடுகிறேன்...கிடைக்கவில்லை !!!!!

சோகத்தில் மூழ்கி இருக்கும் என் இமைகளை திறக்க
என் அவர் எனக்கு வேனும்!!!
வறண்டு போன என் இதழ்களை முத்தம் இட
என் அவர் எனக்கு வேனும் !!!
பின்னிய கூந்தலை கலைத்து விட
என் அவர் எனக்கு வேணும் !!!
மடி மீது தலை வைத்து படுக்க
என் அவர் எனக்கு வேணும் !!!

தேடுகிறேன்... தேடுகிறேன்... கிடைக்கவில்லை !!!

என் உயிரே நீ எங்கே இருக்கிறாய்
உனக்காக காத்திருப்பேன்
கண்களில் உன் உருவமும்
உயிரில் உன் நினைவையும்
சுமந்து கொண்டு கால முழுவதும்


ஓவியா


முன்று முடிச்சு

சிரிக்க தோன்றவில்லை
ஆனால் சிரிக்கிறேன்

உடல் இருக்கிறது
ஆனால் உயிர் இல்லை

வாழ பிடிக்கவில்லை
ஆனால் வாழ்கிறேன்

என் கழுத்தில் நீ போட்ட
அந்த முன்று முடிச்சு
எனக்கு துக்கு கயிறு

ஆனால் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்

நீ என் பிள்ளைகளுக்கு "அப்பா"
என்பதால்


 

என் நண்பன்......

உன் முதல் சந்திப்பு
எனக்கு கிடைத்த
முதல் பரிசு உன் நட்பு!
என் கவிதை படித்து
என் மீது உனக்கு வியப்பு
ஏன் இந்த சோகம் என்று ....

மனம் உடைஞ்ச தருனத்தில்....
ஆயிரம் கடல் தாண்டி
பயணித்து வரும்
உன் அன்பு பேச்சு
என் மனதுக்கு மருந்து

காற்றடித்தாலும் புயல்லடித்தாலும்
நீ காத்திருப்பாய் உன் கணினி முன்
என் வருகைக்காக...

பசி இன்றி தூக்கம் இன்றி
பல மணிநேரம் கதைப்போம்

கள்ளம் கபடம் இல்லாத நம் நட்பு
செடி போல் துளிர் விட்டு
செழிப்பாகி இன்று நல்ல மரமாகிவிட்டது
அதில் உன் நிழலாக நானும்
என் நிழலாக நீயும் வரவேண்டும்


யார் அது .......



உதட்டோரத்தில் ஓர் புன்சிரிப்பு
கண்களில் மயக்கம்
மனதில் ஆயிரம் பட்டாம் பூசிகள்
பறப்பது போல ஒரு உணர்வு
என்னை சுற்றி யார் பேசினாலும்
என் நினைவுகள் வேற
எங்கேயோ அலைபாயுது
நித்திரை கொள்ள முடியவில்லை
சாப்பிட பிடிக்கவில்லை

ஏன் அப்படி
சொல்ல தெரியவில்லை
ஆனால் உணர்கிறேன்
ரசிக்கிறேன்

இதோ புரிந்து விட்டது
நான் தேடின அந்த "அவர்"
எனக்கு கிடைத்து விட்டாரோ!!!



Fall-In-Love

நீ வருவாயா......

உன்னை காணும் வரையில்
எனது வாழ்கை வெள்ளை காகிதம்
வந்தாய் என் வாழ்கையில்
அழகாய் ஓவியம் வரைந்தது போல் ஆனதடா

நான் உன்னை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் உன் சொந்தம்

கடவுள் போல் நீ கிடைத்தாய்
துயரமான என் மனதுக்கு
தென்றலாக வந்தாய்
என்னுள் கவிதையாய் வந்தாய்
கவிதையாய் நெஞ்சில் நிர்கிறாய்
உன்னை நினைத்து
உன்னை சந்திக்கும் நாளை நினைத்து

நாம்
கற்பனேயின் கொஞ்சல்களே
நிஜமாக்க
உன் நினைவுகளின் என்னங்களை
என் உணர்வுகளோடு
பகிர்ந்து கொள்ள
ஆவளோடு காத்திருக்கிறேன்

வருவாயா........


முதியோர் இல்லம்

தான் பசி இன்றி
பால்லுட்டி சீராட்டி
வளர்ப்பார்கள்

இரவு பகலாக
வியர்வை சிந்தி தான் பிள்ளையை
படிக்க வைப்பார்கள்

கடன உடன வாங்கி
வேதங்கள் முழங்க
உற்றோர் உறவினர் வாழ்த்த
தான் பிள்ளைக்கு
மணம் முடித்து மகிழ்ந்து போவார்கள்  


இப்படி
ஆயிரம் போராட்டத்துக்கு பிறகு
அவர்களுக்கு காத்திருப்பது

"முதியோர் இல்லம்"

kavidai 2010


ஓவியா வின் கற்பனை காவியம் !!!!

ஏன் இதயம் வறண்ட பாலைவனம் போல இருந்தது
இன்று
காதல் பூக்கள் பூத்து குலுங்கும் சோலைவனம்
அதில்
வண்ணத்து பூசிகளும் சிட்டு குருவிகளும்
ஆடி பாடும் அழகிய பிருந்தாவனம்

இவை எல்லாம்

உன் விழி திண்டலில்
என் முகம் வெக்கத்தால்
உன் மார்பில் முகம் புதைத்து
நான் தள்ளாடிய போது...

என் தலை சாய்த்து
உன் முரட்டு விரல்கள்
என் கூந்தலில் சிக்கி
மெல்ல என் இதழில்
நீ முத்தம் இட்ட போது...

கம்பிரமான
உனது குரல்
என் செவிகளில்
இன்னிசை பாடிய போது...

கவலைகளையும்
துக்கங்களையும்
மறந்து
இன்று வாழ்கையை
ரசித்து கொண்டிருக்கிறேன்

அன்பே என் கடைசி மூச்சு
இருக்கும் வரை
நீ என்னுடன் இருப்பாயா ??