சிந்திக்க பிடிக்கவில்லை
நித்திரை கொள்ள பிடிக்கவில்லை
உணவை ருசிக்க பிடிக்கவில்லை
மனதில் ஓர் சோகம்
உடம்பில் ஓர் சோர்வு
என்னடா வாழ்கை இது
யோசித்து பார்தேன்
கடைசியில் மிஞ்சியது
யாருக்கும் தெரியாமல்
அழுத அழுகையும்
அழுகையில் நனைந்த
எனது விழிகளும் !!!!!
ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும்
பட்டென்று துடைக்க காத்துகிடக்கின்றன என் இரு கைகள் !!! கவலையால் நீ வாட உன் தலை சாய காத்துகிடக்கின்றன என் இரு தோள்கள் உன் சின்ன சின்ன அசைவுகளும் செவி கொடுத்து கேட்க காத்துகிடக்கின்றன என் இரு செவிகள் வறண்ட உன் உதட்டிற்கு தாகம் தீர்க்க காத்துகிடக்கின்றன என் உதடுகள் காரிருள் மழையில் குளிரில் வாடும் உன் தேகத்திற்கு சூட்டை கொடுக்க காத்துகிடக்கின்றன என் தேகம் என் பெண்மையும் உன் ஆண்மையும் கலந்து வியர்க்கும் நேரம் எப்போதோ !!!!! பகலில் உன் நினைவோடும் இரவில் உன் கனவுகலோடும் தவிக்கும் என் மூளைக்கு ஓய்வு எப்போதோ !!! அதற்கு தீர்வு உன்னை காண்பது மட்டுமே.......... | ||||