நெற்றி பொட்டில்
செல்லமாக முத்தமிட்டு...
கையில் காபி யுடன்
என்ன வந்து எழுப்புவார்..
சின்ன சினுக்களுடன்
அத்தான் என்றேன் !!
கண்ணமா என்றார் !!
காலை பொழுது நான்றாக விடிந்தது
ஆயிரம் பட்டம்பூசிகள்
என் மனதில் குடி கொண்ட
சந்தோஷத்தில்...
மான் போல் துள்ளி துள்ளி
வீட்டு வேலைகளே முடித்தேன்.
மாலையும் வந்தது
கண்களில் காதலுடன்
என் கணவருக்காக
வழி மீது விழி வைத்து
காத்திருந்தேன்...
அதோ அத்தான் வந்துவிட்டார் !!
மெல்ல அனைத்து முத்தம் இட்டு
என் கூந்தலில் மல்லிகை பூ சுட்டினார்.
அந்தி சாயும் அந்த மாலை பொழுதில்
இருவரும் கைகோர்த்து
நிலா வெளிச்சத்தில்
தென்றல் காற்று வீச
மெல்ல நடந்து செல்கிறோம்
மௌனங்களே மொழி பெயர்த்து கொண்டு !!!
Aucun commentaire:
Enregistrer un commentaire